இந்தியாவில் மூக்கு வழி கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தொற்றிற்கு எதிரான உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்து இந்தியாவில் தை மாத இறுதியில் தனியார் மையங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் அசுர வேகத்தில் பரவி வரும் நிலையில் 18 வயத்திற்கு மேற்பட்டவர்களுக்கு மூக்கின் வழியே செலுத்தப்படும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் இன்கோவேக் தடுப்பு மருந்திற்கு மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
உலகின் முதல் நாசி வழி தடுப்பு மருந்தான இன்கோவேக் தை மாத இறுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும்,ஒரு டோஸ் தடுப்பு மருந்து தனியார் மையங்களில் 800 ரூபாய்க்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடனும், அரசு மருத்துவமனைகளில் 325 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,ஒரு டோசில் 4 சொட்டுகள் இருக்கும் எனவும், ஒருவருக்கு 2 சொட்டுகள் செலுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கோவேக்சின் மற்றும் கோவிஷீடு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் இந்த தடுப்பு மருந்தை பூஸ்டர் டோசாக எடுத்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.