இந்தியாவில் அதிமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை

இந்தியாவில் கடலூரில் ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வண்டிப்பாளையம் ஆலை காலனியைச் சேர்ந்த அதிமுக மாவட்ட பிரதிநிதி புஷ்பநாதன் என்பவரே வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபர் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, மர்ம கும்பலொன்று அவரை வெட்டி கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த நபரின் உறவினர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்