இந்தியாவிலிருந்து காதலனை தேடி மட்டக்களப்பு வந்த யுவதி

இந்தியாவின் தமிழ் நாடு, வேலூரைச் சேர்ந்த 32 வயதுடைய இளம் யுவதி தனது காதலனைத்தேடி ஓட்டமாவடிக்கு வந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் கடந்த ஏழு வருடங்களாக கட்டார் நாட்டில் பணி புரிந்து வந்த நேரத்தில் இருவருக்குமிடையில் காதல் உறவு இருந்துள்ளது.

இந்நிலையில், அவரையே கரம் பிடிக்கும் நோக்கில் குறித்த யுவதி இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தன்னை தனது காதலனுடன் சேர்த்து வைக்குமாறு வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.