
இந்தியாவின் குடியரசு தினம் நாளை
இந்தியா தனது 77ஆவது குடியரசு தினத்தை நாளை திங்கட்கிழமை தினம் கொண்டாடுகிறது.
தமது அரசியல் அமைப்பினை ஏற்றுக்கொண்டு காலனித்துவத்திலிருந்து விடுபட்டு, இந்தியா அதிகாரபூர்வமாக குடியரசாக மாறிய நாள் இதுவாகும்.
இதனை முன்னிட்டு தலைநகர் டெல்கியில் நடைபெறவுள்ள பிரமாண்டமான அணிவகுப்பில் இராணுவ யுத்த தாங்கிகள், வானூர்திகள் என்பன பங்குகொள்ளவுள்ளன.
நாளைய நிகழ்வில் ஐரோப்பிய ஆணையகத்தின் தலைவர் உர்சுலா பான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய சபையின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மதிப்புமிக்க இந்த அரச நிகழ்வில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
