இயக்குநர் ஷங்கர் – நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளிவந்தது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது.
திரைப்படத்தின் இறுதியில் “இந்தியன் 3” படத்திற்கான டிரெய்லர் காட்டப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர். ஆனால், தற்போது அந்த எதிர்பார்ப்பு வீணாகி விடும் போலுள்ளது.
சினிமா வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டது. கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதும், “இந்தியன் 2” எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறாததும் காரணமாக கூறப்படுகிறது.
மேலும், இப்படத்தை தயாரித்த லைகா நிறுவனம் பின்வாங்கியதோடு, “இந்தியன் 3” படத்தின் OTT உரிமையை வாங்கிய Netflix நிறுவனமும் தங்களது ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.