இந்தாண்டு 2 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு முதலீடு இலக்கு
இந்த ஆண்டு 1.5 முதல் 2 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதே இலக்கு என தொழில் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் .
2025 ஆம் ஆண்டில் 1 பில்லியன் அமெரிக்க டொலருக்கு அதிகமான வெளிநாட்டு முதலீடு நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார் .
பொருளாதார வளர்ச்சி ஆரம்பத்தில் சுமார் 3.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டபோதும்,வருடாந்த 5% வளர்ச்சி விகிதத்துடன் முடிவடைந்ததாகவும் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.
2026 ஆம் ஆண்டை எதிர்நோக்கி, அரசாங்கம் பொது முதலீட்டுக்காக 4,480 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது, அரசாங்கம் குறிப்பாக முக்கியமான தேசிய உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதில் அதிக கவனம் செலுத்துகிறது என அமைச்சர் வலியுறுத்தினார்.
பேரிடர் நிவாரணப் பொதியின் ஒரு பகுதியாக, உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார் .
