இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து
இத்தாலிய தீவான லெபிடுசாவுக்கு அருகில்இ சர்வதேச கடல் பகுதியில் 100 புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்ள்ளனர்.
மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர் என்று இத்தாலிய கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.
லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால்இ அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.
ஆனால்இ அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால்இ உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனவும் இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தடன் படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய ஊடகப் பேச்சாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்துள்ளார்.
