பாத யாத்திரையில் பாம்பு தீண்டி குடும்பஸ்தர் மரணம்!

பொத்துவில் உகந்த முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்திற்கு பாத யாத்திரை சென்ற ஒருவர் குமுக்கன் வனப்பூங்கா பகுதியில் வைத்து நேற்று வியாழக்கிழமை பாம்பு தீண்டியதில் உயிரிழந்துள்ளார்.

லிங்கசாமி கேதீஸ்வரன் (வயது – 45) என்ற நபரே பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குமுக்கன் பகுதியில் பாத யாத்திரிகர்களுக்காக நடமாடும் வைத்திய சேவையில் ஈடுபட்டிருந்த வைத்தியர்கள் நோயாளர் காவு வண்டியில் திருக்கோயில் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.