இதுவரை 959,109 மேல்முறையீட்டு மனுக்களும் 16,322 ஆட்சேபனைகளும் சமர்ப்பிப்பு!

அஸ்வெசும ஆறுதல் நலன்புரி வேலைத்திட்டத்தின் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்று திங்கட்கிழமையுடன் நிறைவடைந்துள்ள நிலையில்  குறித்த பட்டியல் ஜனாதிபதி செயலகத்திற்கு வழங்கப்பட உள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி,  இதுவரை 9 இலட்சத்து 59 ஆயிரத்து 109 மேல்முறையீட்டு மனுக்களும்,  16 ஆயிரத்து 322 ஆட்சேபனைகளும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

எந்தவொரு பிரதேசத்திலும் மேன்முறையீடுகள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால்  அது குறித்து ஜனாதிபதி செயலகத்தில் முறைப்பாடளிக்க முடியும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பெஸ்குவெல் தெரிவித்துள்ளார்.