இதய நோயால் ஏற்படும் 80% மரணங்கள் தடுக்கக்கூடியவை
உலகளாவிய ரீதியில் இதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளில், 80% தடுக்கக்கூடியவை என இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்ச்சியின் போது அவர் இதனை குறிப்பிட்டார் .
, தடுக்கக்கூடிய இதயநோய் தொடர்பான உயிரிழப்புகளைத் தடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் மருத்துவர் சம்பத் விதானவசம் வலியுறுத்தியுள்ளார்.
எளிமையான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் மூலம் இதயநோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதயநோயைத் தவிர்க்க உடற்பயிற்சி, சிறந்த உணவு முறை, மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்த்தல் போன்ற சில செயற்பாடுகளும், மருத்துவ பரிசோதனைகளும் அவசியமென இலங்கை இதயநோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் மருத்துவர் சம்பத் விதானவசம் தெரிவித்துள்ளார்.
