இண்டிகோ ஏர்லைன்ஸ் இன்று முதல் புதிய விமான சேவையை ஆரம்பிக்கிறது!
சென்னை – பினாங்கு நேரடி விமான சேவை இன்று சனிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவின் கட்டுப்பாட்டின் கீழுள்ள தீவு மாநிலமான பினாங்குக்கு பல்வேறு நாடுகளில் இருந்து நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது சென்னை-பினாங்கு நேரடி விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இன்று ஆரம்பித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 2.15 க்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் காலையில் பினாங்கு தீவுக்கு செல்லும்.
பின்னர், பினாங்கிலிருந்து காலையில் புறப்படும் விமானம் காலை 10.35 க்கு சென்னை வந்தடையும்.