இணைய மோசடியை தடுக்க விசேட வேலைத்திட்டம்

இணையம் மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண மோசடிகளை தடுக்க விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார் .

இந்த வேலைத்திட்டம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படுகின்றது.

இணைய வழியிலான குற்றங்களைக் கண்டறியவும், பொதுமக்கள் இவ்வாறான மோசடிகளில் சிக்காமல் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.