
இணைபாடவிதானத்தில் சாதித்த உத்தியோகத்தருக்கு பாராட்டு
-அம்பாறை நிருபர்-
கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் ஆ.வாகீசனை கௌரவிக்கும் நிகழ்வானது பாடசாலை அதிபர் அருட்சகோதரர் எஸ்.ஈ. ரெஜினோல்ட் தலைமையில் நடைபெற்றது.
கியோக்குஷின்ரியூ (Kyokushinryu) சர்வதேச கராத்தே அமைப்பினால் நடாத்தப்பட்ட கறுப்புப் பட்டியினருக்கான தரப்படுத்தல் நிகழ்வில் சென்சே (Sensei) ஆ.வாகீசன் கறுப்புப்பட்டியில் அடுத்த நிலையான 2ம் நிலைக்கு (2nd Dan – Nidan) தரமுயர்த்தப்பட்டிருந்தார். இவருக்கான சர்வதேச சான்றிதழ், கறுப்புப்பட்டி, கறுப்புப்பட்டிக்கான சர்வதேச அட்டை (Black belt card) ஆகியன பாடசாலை அதிபர் அவர்களால் பாடசாலை சமூகமாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வாகீசனால் இந்த பாடலையில் Kyokushin கராத்தே பயிற்சி வகுப்புக்கள் முறையாக நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்ததக்கது. ஊக்குவிப்புக்களையும், ஒத்துழைப்புக்களையும் வழங்கிய பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர்கள், உப அதிபர்கள், பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலைச் சமூகம் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளது.


