இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வு

-யாழ் நிருபர்-

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய மாணவர்களின் செயற்பட்டு மகிழ்வோம் நிகழ்வானது நேற்றையதினம் இணுவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

மாலை அணிவித்து, மேற்கத்தேய இசை வாத்தியங்கள் முழங்க, கிருமிய நடனத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டு நூலக கொடி ஏற்றி வைக்கப்பட்டு, மங்கல விளக்கேற்றி, இறை வணக்கம் இசைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் தீபம் ஏற்றிய பின்னர் பிரதம விருந்தினர் நிகழ்வை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பின்னர் கலாச்சார நிகழ்வுகள், விளையாட்டுகள், இசையும் அசைவும் நிகழ்வு, பரிசில்கள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

ம.கஜந்தரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வலிகாமம் கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் நா.சிவநேசன் கலந்து சிறப்பித்ததுடன் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டனர்.