இடியுடன் கூடிய மழை பெய்யலாம்

நாட்டின் சில பகுதிகளில் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும் பலத்த இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

இதனால் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.