இடியுடன் கூடிய பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி மத்திய, ஊவா, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படும் அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.