இடம்பெயரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

லெபனானில் உள்ள மொத்த சனத் தொகையில் 25 சதவீதமானோர் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரால் வெளியேற்றப்படுவதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது.

தெற்கு லெபனானில் உள்ள 20 கிராமங்களைச் சேர்ந்த மக்களை வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்துரைத்துள்ள ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகத்தின் மத்திய கிழக்கு பிராந்திய பணிப்பாளர் ரேமா ஜேமஸ், அங்குள்ள மக்கள் மறுப்பு தெரிவிக்காமல் தங்களது இருப்பிடங்களை விட்டுச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக வடக்கே உள்ள நகரங்களுக்கு மக்கள் இடம்பெயர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் பலர் பாதுகாப்பற்ற இடங்களில் தங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் ஏதிலிகள் முகவரகம் தெரிவித்துள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்