இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள்
இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள்
இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள்
⭕உலகில் பிறந்த பெரும்பாலானோர் தங்களின் எந்த ஒரு செயல்பாடுகளையும் வலது கைகளில் தான் செய்வார்கள். ஆனால் சிலர் இடது கைகளில் செய்வார்கள். இடது கை பழக்கம் உள்ளவர்களை சில பகுதிகளில் உள்ளோர் அதிர்ஷ்டசாலிகளாகவும், இன்னும் சில பகுதிகளில் உள்ளோர் துரதிர்ஷ்டசாலிகளாகவும் நினைக்கிறார்கள்.
⭕எனவே வலது கை பழக்கம் அதிகம் உள்ள இவ்வுலகில் இடது கை பழக்கம் உள்ளவர்களை சிறப்பாக உணர வைக்கும் நோக்கத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 ஆம் திகதி சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.
⭕இந்த தினம் முதன்முதலாக 1992 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜ்ஜியத்தில் இடது கைகள் கிளப்பால் தொடங்கப்பட்டது. இன்று சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் என்பதால், இடது கை பழக்கம் உள்ளவர்களிடம் உள்ள சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான குணங்கள் என்னவென்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
💦இடது கை பழக்கம் உள்ளவர்கள், தினசரி வேலைகளை செய்ய தங்கள் இடது கையை பயன்படுத்த தொடங்கியதில் இருந்தே சவால்களை சமாளிக்க கற்று கொண்டுள்ளார்கள். தற்போதைய உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலானவை அனைத்துமே வலது கை பழக்கம் உள்ளவர்களுக்காகத் தான். ஆனால் அதையே இடது கை பழக்கம் உள்ளவர்கள் எளிதில் பயன்படுத்த கற்றுக் கொண்டுள்ளார்கள். இதனால் இவர்கள் எப்பேற்பட்ட சிக்கலையும் மற்றும் கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளித்து வெளிவரும் வழியை நன்கு அறிந்திருப்பார்கள்.
💦இடது கை பழக்கம் உள்ளவர்கள் பொதுவாக தங்களின் வலது மூளையை அதிகம் பயன்படுத்துவதால், அவர்கள் நல்ல ஆக்கப்பூர்வமானவர்கள் மற்றும் அதிக உள்ளுணர்வைக் கொண்டவர்கள். முக்கியமாக நல்ல கற்பனைத் திறனைக் கொண்டிருப்பார்கள் மற்றும் நன்கு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் பேசும் ஆற்றலைக் கொண்டிருப்பார்கள். நல்ல தலைமைத்துவ பண்புகளைக் கொண்டிருப்பார்கள்.
💦இடது கை பழக்கம் கொண்டவர்கள் மிகவும பொறுமைசாலி. எந்த ஒரு விஷயத்தையும் எடுத்தோம், கவுத்தோம் என்று இருக்காமல், பொறுமையாக அதைக் கையாள்வார்கள். மேலும் இவர்கள் அதிக புத்திசாலி. சிறப்பான நினைவாற்றலைக் கொண்டிருப்பார்கள்.
💦இடது கை பழக்கம் கொண்டவர்கள் விளையாட்டுக்களில் சிறந்து விளங்குவார்கள். இவரகள் எந்த ஒரு பிரச்சனை அல்லது சூழ்நிலையையும் மிகவும் உள்ளுணர்வுடன் அணுகுவார்கள். இவர்கள் எப்போதும் வித்தியாசமாக யோசிப்பார்கள். அதாவது வழக்கமாக யோசிப்பதை விட, வித்தியாசமான கோணத்தில் இருந்து யோசித்து தீர்வு காண்பார்கள்.
இவர்கள் குத்துச்சண்டை, டென்னிஸ், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களில் விளையாடினால் சிறந்து விளங்குவார்கள். மேலும் இவர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்கு ஏற்ப மாற்றி இருந்து கொள்வார்கள். இவர்கள் தகவல்களை வேகமாக செயலாக்கவும், பல வேளைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடியய திறமையையும் கொண்டிருப்பார்கள். முக்கியமாக இது கை பழக்கம் உள்ளவர்கள் வலது கை பழக்கம் உள்ளவர்கள் விட அதிக வார்த்தைகளை டைம் செய்வதில் வல்லவர்கள்.
இடது கை பழக்கம் உள்ளவர்களின் குணங்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்