இஞ்சியில் இத்தனை மருத்துவ குணங்களா?

 

இஞ்சியின் சுவையை ஏற்படுத்துவதற்கு இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண அல்லது பலசரக்குப் பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றது. இது ஒரு மருத்துவ குணமுடைய மூலிகையாகவும் திகழ்கின்றது.

இஞ்சுதல் என்றால் நீரை அல்லது தண்ணீரை உள்ளிழுத்தல் மற்றும் உள்ளிழுப்பதால் இஞ்சி எனும் பெயரை பெற்றது.

உலர்ந்த இஞ்சியே ‘சுக்கு’ எனவும்  சில பகுதிகளில் வேர்க் கொம்பு என அழைக்கப்படுகிறது. இது பல மருத்துவப் பயன்களையும், குணங்களையும் கொண்டுள்ளது. ‘சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை’ என்று இதன் மேன்மையை பெறுமதி சேர்க்கலாம். சுக்குக் கசாயம் மிக நல்ல வலி நீக்கும் மருந்தாகும். இது ஓராண்டுப் பயிராகவும் காணப்படுகின்றது.

இந்த இஞ்சியின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? தினமும் அதிகாலையில் எழுந்தவுடன் ஒரு சிறிய இஞ்சித்துண்டு அல்லது அதன் சாற்றை பிழிந்து குடிப்பதனால் சர்க்கரை வியாதி குறைவதோடு பசி உணர்வு இல்லாதவர்களுக்கும் கூட பசி உணர்வை சீக்கிரத்தில் உண்டு பண்ணும். இஞ்சியில் நாம் அறிந்திராத எத்தனையோ அற்புத குணங்கள் இருக்கின்றன அவற்றை பற்றி நாம் அறிந்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

விட்டமின் ஏ, சி, பி6, பி12 மற்றும் கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து போன்றனவும்  அடங்கியிருக்கின்றன. நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடனும், சீராக்கவும் உதவுகின்றது. இவற்றில் அடங்கியுள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தங்களின் கூந்தலுக்கும் இயற்கையான பொலிவைத் தருவதோடு, பொடுகையையும் முற்றாக நீக்கி, முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மையைக் கொண்டிருக்கிறது.

ஆயுள் நீடிப்பதையும் இஞ்சியின் மூலம் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். அதாவது, இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காயச் சாறு இந்த மூன்றையும் ஒரே வேளையில் அரைத்து சாப்பிடுவதாலும் எம்மால் வாழக்கூடிய வாழ்நாட்களை அதிகப்படுத்திக் கொள்ள முடியும். அரைக் கரண்டி வீதம் அவற்றை தினமும் சாப்பிடுவதால் தங்களின் அயுள் நீடிப்பதோடு  இரைப்பும், இருமலும்  குணமாகும்.

வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்குவதற்கு இஞ்சி சாற்றை பாலில் கரைத்துக் குடிப்பதாலும் தங்களது வயிறு சம்மந்தப்பட்ட வலிகளும், நோய்களும் குணமடைகின்றது. மேலும், மலச்சிக்கல், மார்பு வலி, களைப்பு என்பன நீங்குவதற்கும் இஞ்சி சாற்றை அல்லது இஞ்சியை துவையல் செய்து அல்லது பச்சடி செய்து சாப்பிடுவதன் மூலம் தமது நோய்களை குணமாக்கி உடலுக்கு மிருதுவான தன்மையையும் ஏற்படுத்திக் கொள்ள முடிகின்றது. இவற்றினால் உடம்பு இளைக்க கூடிய சாத்தியங்களும் உண்டு.