இசை கருவிக்குள் மீட்கப்பட்ட போதை பொருள்

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள வீட்டில் இருந்து பாரிய தொகை போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இசை கருவிக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு கிலோகிராமுக்கும் அதிக நிறையுடைய ஐஸ் போதைப் பொருள் மற்றும் 500 கிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த வீட்டிலிருந்து சில தொலைபேசிகள் மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படும் சிம் அட்டைகள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதன்போது வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படும் நபர் பொலிஸாருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். குறித்த நபரை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பான முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.