இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா
இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.
பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள குறித்த போட்டி இலங்கை நேரப்படி நாளை பிற்பகல் 3.30க்கு ஆரம்பமாகவுள்ளது.
முன்னதாக இரு அணிகளும் மோதிய முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.