
இங்கிலாந்து பல்கலைக்கழக மாணவரான இலங்கையர் விபத்தில் உயிரிழப்பு
இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்கும் இலங்கை மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஓஷத ஜயசுந்தர (வயது 31) என்ற பல்கலைகழக மாணவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
அவர் டிசம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த போது வேகமாக வந்த கார் ஒன்றினால் மோதப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக 27 வயதான காரின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் எதிர்வரும் ஜனவரி 12 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என அந்நாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
மேலும் விசாரணைகளின் போது விபத்து இடம்பெற்ற குறித்த வீதி பலமணிநேரம் மூடப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.
