இங்கிலாந்து நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள இலங்கையர் : குற்றம் என்ன?
இலங்கையைச் சேர்ந்த ஒருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்துக்குள் நுழைந்ததற்காகவும், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காகவும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகவுள்ளார்.
Fratton, நியூ வீதியை சேர்ந்த சுகிர்த்தன் தங்கராசா (வயது 37) என்பவர் மீதே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதி சவுத்தாம்ப்டனில் உள்ள ஹைஃபீல்ட் வீதியில் 25 வயது நபர் ஒருவரை சுகிர்த்தன் தங்கராசா தாக்கியுள்ளார்.
பின்னர் அதே பகுதியில் அவர் அநாகரிகமாக நடந்துக் கொண்டுள்ளார்.
குறித்த சம்பவத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு இன்று சனிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
