இங்கிலாந்து – தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் இன்று பலப் பரீட்சை

மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் மோதுகின்றன .

போட்டி இன்று பிற்பகல் 3 மணிக்கு குவஹாத்தியில் நடைபெறுகிறது .

இதேநேரம் மகளிர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி தொடரின், நேற்றைய போட்டியில், பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

போட்டியின், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் மகளிர் அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 38.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது.

130 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பதிலளித்தாடிய பங்களாதேஷ் அணி, 31.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றி பெற்றது.