இங்கிலாந்து கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மர்ம உயிரினம்
இங்கிலாந்து கடற்கரையில் மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பவுலா மற்றும் டேவ் ரீகன் என்பவர்கள் கடந்த 10 ஆம் திகதி இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு இந்த எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.
இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது.
இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும் குறித்த மர்ம உருவம் கடல்கன்னி போன்று மரத்தால் உருவாக்கப்பட்டு கப்பல்களில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவை கடலில் விழுந்து கரை ஒதுங்கியிருக்கலாம் எனவும் பயனர்கள் தெரவிக்கின்றனர்.
