இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடர் : இந்தியக் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 14 மாதங்களுக்குப் பின்னர் மொஹமட் ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக் கிண்ண தொடரின் போது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக மொஹமட் ஷமி அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்தியக் குழாமில் சஞ்சு சாம்சன், யசஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, மொஹமட் ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, த்ருவ் ஜூரல், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டெல், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்