இங்கிலாந்தில் புதிய விசா விதிகள் நடைமுறைக்கு வந்தது

புதிய புலம்பெயர் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது .புதிய புலம்பெயர் விதிகள் நேற்று அமுலுக்கு வந்தது .

புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது .

இதேநேரம் நோயாளிகள், ஊனமுற்றோரை கவனித்துக்கொள்ள அனுமதிக்கப்படும் பணியாளர்களுக்கான விசா நிறுத்தப்பட்டுள்ளது .

 

வெளிநாட்டு மாணவர் சேர்க்கையில் பல்கலைக்கழகங்களும் கடுமையான விதிகளை எதிர்கொள்ள நேரிடும்என தெரிவிக்கப்படுகிறது .

 

பட்டப்படிப்புக்கு பிந்தைய முதுநிலை படிப்புகளுக்கான காலம் குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பணியாளர் நிரந்தர குடியுரிமைக்கான கால அவகாசத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீடிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

பணி விசா வைத்திருப்பவர் குடும்ப உறுப்பினர்களுக்கு, ஆண்டு இறுதிக்குள் ஆங்கில மொழித் தகுதியை கடுமையாக்க உள்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .