இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்படும்

இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் 3 வான் கதவுகள் இன்று திங்கட்கிழமை திறக்கப்படும் எனவும் மக்களை அவதானமாக இருக்குமாறும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற கால நிலை காரணமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை இகினியாகல சேனநாயக்கா சமுத்திரத்தின் நீர்மட்டம் 102/110 அடியை எட்டியுள்ளது. இந்த நிலமையை கருத்தில் கொண்டு 3 வான் கதவுகள் திறக்க நேரிடலாம் என அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாவட்டத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்