
ஆஷஸ் டெஸ்ட்: முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா திணறல்
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இரு அணிகளுக்குமிடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த்தில் இன்று தொடங்கியது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதல் இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 172 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனையடுத்து தமது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 123 ஓட்டங்களை அடித்துள்ளது.
இந்தநிலையில் அவுஸ்திரேலிய அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
