ஆவணப்படத் திரையிடலும் புத்தக அறிமுக விழாவும்
-யாழ் நிருபர்-
எழுநாவினால் தயாரித்து வெளியிடப்பட்ட ‘நீதிக்காக நீண்ட காத்திருப்பு’ எனும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான ஆவணப்படம் திரையிடலும் , செம்மணி தொடர்பான கவிதைகள் ‘வாசலிலே கிருஷாந்தி’ என்னும் நூலின் அறிமுக விழாவும் அச்சுவேலி தெற்கு, கலாநிதி சனசமூக நிலையத்தில் கடந்த சனிக்கிழமை அன்று வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினரும் கலாநிதி சன சமூக நிலைய தலைவரும் ஆகிய பி.நேருஜன் தலைமையில் இடம்பெற்றது.
நிலையத்தின் செயலாளராகிய தர்ஷனால் நூல் பற்றிய மதிப்பீட்டுரை வழங்கப்பட்டது.


