ஆளுங்கட்சியின் 12 முக்கியஸ்தர்கள் எதிர்க்கட்சிக்கு

நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 12 உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமர உள்ளனர்.

இதன்படி, பொதுஜன பெரமுனவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், டலஸ் அழகப்பெரும, பேராசிரியர் சன்ன ஜயசுமண, பேராசிரியர் சரித ஹேரத், பேராசிரியர் நாலக கொடஹேவா, பேராசிரியர் குணபால ரத்னசேகர, கலாநிதி உபுல் கலப்பட்டி, கலாநிதி திலக் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, உதயன கிரிந்திகொட, வசந்த யாப்பா பண்டார, கேபிஎஸ் குமாரசிறி ஆகிய 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்க்கட்சியில் அமர உள்ளனர்.

2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.