ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு தீ வைப்பு

-யாழ் நிருபர்-

உடுவில், தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தில் உள்ள பனை மரங்களுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை, சில விசமிகளால் தீ வைக்கப்பட்டு இருபதுக்கும் மேற்பட்ட பனைமரங்கள் அழிவுற்றுள்ளன.

சரியான நேரத்தில் உரிய தரப்பினருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து, மாநகர தீ அணைப்பு சேவையூடாக தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இவ் பனை மரங்களுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக துரித விசாரணைகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸாரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.