ஆலய வளாகத்தில் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு மாணிக்கப்பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மாமரத்தில் நபர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் குரவில் உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த கந்தசாமி தர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்ட பின்னர், உடற்கூறு பரிசோதனைக்குப் பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணங்களால் உயிரிழந்தாரா என்பது குறித்து புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.