ஆலயம் உடைக்கப்பட்டு அம்மனின் தாலி திருட்டு

-நுவரெலியா நிருபர்-

மஸ்கெலிய பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சாமிமலை கிலனுஜி தோட்டத்தில் அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, அம்மனுக்கு அணிந்திருந்த தாலி மற்றும் ஆலய உண்டியல் என்பன களவாடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

ஆலயத்தின் அருகில் வசிக்கும் ஒருவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில்  ஆலயத்தின் மின்குமிழை நிறுத்துவதற்கு சென்ற போது, ஆலயத்தின் நுழைவாயில் கதவு உடைக்கப்படடிருப்பதை கண்டு ஆலய நிர்வாக சபைக்கு அறிவித்ததையடுத்து, ஆலய நிர்வாக சபையினரால் மஸ்கெலிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரனைகளை மஸ்கெலிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.