ஆலயத்தில் திருட்டு : சந்தேக நபர் ஒருவர் கைது
ஹப்புத்தளையிலிருந்து தம்பேதன்ன செல்லும் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ குறிஞ்சி முத்துமாரியம்மன் ஆலயத்தை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதானவர் ஹப்புத்துளை, சர்வட்டி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு குறித்த ஆலயத்தினுள் இருந்து தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல்களில் இருந்த பணம் என்பவை களவாடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, குறித்த ஆலயத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி காணொளி உதவியுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தொடர்புடைய செய்தி :
