ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுளைந்தனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிங்ஸ்பரி ஹோட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.

பொலிஸாரினால் இடப்பட்டிருந்த சாலைத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன.

போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்படுவதுடன், அதனை மீளவும் போராட்டக்காரர்கள் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் நோக்கி வீசி வருகின்றனர்.

பொலிஸ் குழுக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.