
ஆரம்ப கல்வி ஆசிரியர் கைது
-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவரை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியர் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
தரம் 4 இல் கல்வி பயிலும் 9 வயது பாடசாலை சிறுவனை 38 வயது ஆரம்ப கல்வி கற்பிக்கின்ற ஆசிரியர் ஒருவர் அப்பாடசாலையின் மலசல கூடத்திற்கு அழைத்து சென்று பலமுறை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த மாணவனின் பெற்றோர் நேற்று வழங்கிய முறைப்பாட்டிற்கமைய ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேக நபரான ஆசிரியரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் நேற்று புதன்கிழமை முன்னிலைப்படுத்திய வேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 27 ஆந் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 9 வயது பாடசாலை சிறுவன் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
