ஆயுதத்தால் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் காயம்

வவுனியா – மெனிக்பாம் பகுதியில் ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத சிலர் இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளனர்.

பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கோரி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இதன்போது காயமடைந்த மூவர் செட்டிக்குளம் பிரதேச வைத்தியசாலையிலும் ஒருவர் வவுனியா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்