ஆயுதங்களை தேடி மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணி இடைநிறுத்தம்!

 

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி – தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி கிராம அலுவலர் பிரிவு ஏ-35 பிரதான வீதியில் அருகே தனியார் காணி ஒன்றில், விடுதலைப் புலிகளின் ஆயுதம் இருப்பதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக, பொலிசார் வியாழக்கிழமை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமீல் முன்னிலையில் அகழ்வுப்பணி முன்னெடுக்கப்பட்டது.

பொலிசார், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் முன்னிலையில் அகழ்வுப்பணி மேற்கொள்ளப்பட்ட போது, எந்தவித தடயங்களும் கிடைக்காத நிலையில், அகழ்வுப்பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.