ஆயுதங்களுடன் மூவர் கைது

ரங்கல பொலிஸ் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவரை மீகொட பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து துப்பாக்கிகள் மற்றும் ரவைகள் என்பன கைப்பற்றப்படடுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர், 12 ரவைகள் 09 மி.மீ மற்றும் 11 ரவைகள் 5.26 மி.மீ துப்பாக்கிக்குரியன என்பன மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் 22 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் இவர்கள் ஓவிட்டகம மற்றும் யடபத்த பிரதேசங்களில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.