
ஆயுதங்களால் ஒருவர் குத்திக்கொலை!
பெலவத்தை நகரில் உள்ள தனியார் வைத்திய நிலையமொன்றுக்கு சிகிச்சைக்காக சென்ற ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கிய நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொகரதுவ, பெலவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த நபர் காலில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக பெலவத்தையில் உள்ள தனியார் வைத்திய நிலையத்திற்குச் சென்றிருந்தார். அப்போது, கார் ஒன்றில் வந்த சிலர் அவரை கூரிய ஆயுதங்களால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, உயிரிழந்தவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அங்குச் சென்ற அடையாளம் தெரியாத ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துச் சென்றிருந்ததாக அவரின் தந்தை பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
களுத்துறை நாகொட வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
