
ஆயிரக்கணக்கில் வருமானம் பெறும் யாசகர்கள்: குழுக்களாக செயற்படுவதாக தகவல்
யாசகர் ஒருவருக்கு ஒரு மணிநேர வருமானம் 4000 ரூபாவை விட அதிகம் பதிவாகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் மயூர சமரகோன் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் ஒரு இடத்தில் தங்கி யாசகம் பெறும் நபர்களை அப்புறப்படுத்தினால், அந்த இடத்தில் உள்ள வெற்றிடங்களை நிரப்ப புதிய யாசகர்களை நியமிக்க குழுக்கள் செயல்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
