ஆப்கானிஸ்தான் நில அதிர்வு : 200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வால் 250 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் 500க்கும் மேற்பட்டடோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நில அதிர்வு 6.0 மெக்னிடியூட்டாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.