ஆப்கானிஸ்தான்-காபுலில் குண்டுத் தாக்குதல் : 66 பேர் பலி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள வழிபாட்டுத் தலம் ஒன்றில்இ நேற்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 66 பேர் பலியாகியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது

மேலும், 78 பேர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்களின் ஆட்சி நிலவும் ஆப்கானிஸ்தானில் நடத்தப்பட்ட இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.