ஆப்கானிஸ்தானில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

ஆப்கானிஸ்தானில் இன்று புதன்கிழமை மதியம் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 10 ஆம் திகதி ஆப்கானிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது