ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்து – 26 பேர் உயிரிழப்பு 27 பேர் காயம்

ஆப்கானிஸ்தானில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்ததாகவும், 27 பேர் காயமடைந்ததாகவும் அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ஆப்கானிஸ்தானிலிருந்து நேற்று  புதன்கிழமை அதிகாலை பயணித்த இந்த பஸ் காபூலின் அர்கண்டி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

பஸ்ஸில் பயணித்தவர்கள் ஹெல்மண்ட், கந்தஹார் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

பஸ் அதிவேகமாக சென்றதும், டிரைவர் துாக்க கலக்கத்தில் இருந்ததும் விபத்துக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பஸ் உருண்டதில் 26 பயணியர் பலியாகினர். மேலும், 14 பேர் காயமடைந்தனர்.

விபத்து இடம்பெற்ற சிறிது நேரத்தில் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டதோடு, காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த 19ஆம் திகதி ஆப்கானிஸ்தானின் ஹெராத் நகரில் கொடூரமான பேருந்து விபத்தொன்றில் சிக்கி 80 பேர் பலியான நிலையில், ஒரு வாரம் கழித்து, அந்நாட்டில் மீண்டுமொரு பஸ் பதன்கிழமை விபத்துக்குள்ளாகியிருக்கிறது.