ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு – 1,400 பேர் பலி

தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது.

இதன்படி, நில அதிர்வினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,411 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சுமார் 3,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தலிபான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.