ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின், இந்துகுஷ் பகுதியில் நேற்று (31) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நிலநடுக்கத்தின் தாக்கம் டெல்லியிலும், பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூரிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலநடுக்கம் கடல் மட்டத்தில் இருந்து 8 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
