
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் : பலர் உயிரிழப்பு!
ஆப்கானிஸ்தான் – காபூல் அருகே இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலர் பலியாகினர்.
சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரச அலுவலகங்களை இலக்கு வைத்து இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் தற்கொலைக் குண்டு தாக்குதல்தாரியும் அந்த நாட்டு பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டார்.
இது ஆப்கானிஸ்தானில் இந்த வாரம் நடந்த இரண்டாவது குண்டுவெடிப்பு சம்பவமாகும்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆப்கானிஸ்தான் நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.