
ஆப்கானில் இருந்து போதைப் பொருள் கடத்தல் : ரூ.12ஆயிரம் கோடி மதிப்பு
இன்றைய நாட்களில் போதைப் பொருள் கடத்தல் அதிகரித்து காணப்படுகிறது. கப்பலில் கடத்தி வரப்பட்ட 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் இந்தியா கொச்சி அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்க இந்திய கடற்படையுடன் இணைந்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிசார்இ பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையேஇ அரபிக் கடலில் அதிகளவிலான போதைப் பொருட்களை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று இந்தியா வருவதாக தகவல் அதிகாரிகளுக்கு கிடைக்க பெற்றது.
அதன் அடிப்படையில் கொச்சி அருகே ஒரு கப்பலை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர். அந்தக் கப்பலில்இ 134 மூட்டைகளில்இ 2 ஆயிரத்து 500 கிலோ மெத்தம்பட்டமைன் என்ற ஒரு வகை போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது. அதனைப் பறிமுதல் செய்த அதிகாரிகள்இ பாகிஸ்தானை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் கொச்சி அருகே மட்டஞ்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
